வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து குறித்து தகவலை வெளியிட்டு இருக்கிறது கேரள அரசு.

பல்­வேறு மாநி­லங்­களில் கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து வரும் நிலை­யில், பல்வேறு மாநிலங்கள் பள்ளி, கல்­லூ­ரி­களைத் திறக்க உத்தர­விட்­டுள்­ளன. 

கடந்த பல மாதங்­க­ளாக கேர­ளா­வில் தொற்று எண்­ணிக்கை அவ்­வப்­போது அதி­க­ரித்தும், குறைந்தும் வந்துகொண்டே இருந்தது. நேற்று திருவனந்தபுரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்தது. 

பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பினராயி விஜயன் கூறிய போது, ‘கேரளாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால், மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருந்து வந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. 

வருகிற 28-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் காலை முதல் மாலை வரை முழு நேரமும் செயல்படும். பள்ளிகளில் ஆண்டு தேர்வுகளை மாணவ- மாணவிகள் எழுதும் வகையில், அதற்கு முன்னதாக பாடங்களை முடிக்க ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது’ என்று கூறினார்.