சென்னை நிறுவன கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் பலி! நள்ளிரவில் சோதனை! உற்பத்தி நிறுத்தம்
global pharma eye drops: சென்னையைச் சேர்ந்த குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரி்த்து அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்திய ஒருவர் உயிரிழந்தார், 56 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
global pharma eye drops: சென்னையைச் சேர்ந்த குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரி்த்து அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்திய ஒருவர் உயிரிழந்தார், 56 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கண் சொட்டு மருந்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதால், அந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க மருந்துதரக்கட்டுப்பாட்டு அமையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னையைச் சேர்ந்த குளோபல் ஃபா்மா ஹெல்த்கேர் நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, தமிழ்நாடு மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரிகள் குளோபல் ஃபா்மா ஹெல்த்கேர் நிறுவனத்தின் உற்பத்தி மையத்துக்கு ஆய்வு செய்துள்ளனர். இந்த நிறுவனம் சென்னையில் இருந்து 40கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது.
குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்த கண்சொட்டு மருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. அமெரிக்காவில் Artificial Tears Lubricant Eye Drops என்ற பெயரில் கண் சொட்டு மருந்தை விற்பனை செய்துள்ளது.
தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள மருத்துவர் விபி விஜயலட்சுமி தனியார் சேனலுக்குஅளித்த பேட்டியில் “ குளோபல் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு சென்று ஆய்வு செய்தோம். இந்த ஆய்வு நள்ளிரவு 2 மணிவரை நடந்தது. மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளோம், மருந்து தயாரிக்கப்பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளோம். முதல்கட்டஅறிக்கையை அரசுக்கு அளித்துள்ளோம்.
பிரதமர் மோடி-க்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பிரிவுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை எவ்வளவு?
மருந்து நிறுவனத்தின் உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மருந்தை உற்பத்தி செய்யவும், ஏற்றமதி செய்யவும் உரிய அனுமதி, அங்கீகாரம் பெற்றுள்ளது. அமெரிக்க மருத்துவ அதிகாரிகள் மருந்தை ஆய்வு செய்து, விசாரித்தபின்புதான் அடுத்தகட்ட விவரங்கள் தெரியவரும்” எனத் தெரிவித்தார்
குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ அமெரிக்காவில் உள்ள மக்கள், யாரும் தங்கள் மருந்தைப் பயன்படுத்த வேண்டாம். எங்கள் மருந்தில் எதிர்மறையான பாதிப்பு ஏற்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். உதவி எண்களும் அறிவித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே குளோபல் ஹெல்த் கேர் கண் சொட்டுமருந்து அமெரிக்காவில் எஸ்ரிகேர் ஆர்ட்டிபிஷியல் டியர்ஸ் ஐ டிராப்ஸ் என்ற பெயரில் விற்பனையாகியுள்ளது. அந்த மருந்துகளின் திறக்கப்படாத பாட்டில்களை அமெரிக்க மருந்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் குலோபல் ஹெல்த் கேர் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தி,12 மாநிலங்களில் 55 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.