Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் முன்மாதிரியாக திகழும் கேரளா - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் ‘திருநங்கைகள் பிரிவு’

The exclusive organization of transgender organizations in Kerala the CPI the Indian Democratic Youth Association has been launched in Kerala.
The exclusive organization of transgender organizations in Kerala the CPI the Indian Democratic Youth Association has been launched in Kerala.
Author
First Published Oct 5, 2017, 5:38 PM IST


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் (டி.ஒய்.எப்.ஐ.) திருநங்கைகள் அதிகம் இருக்கும் பிரத்யேக அமைப்பு கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் 9 திருநங்கைகள் முதல் கட்டமாக இணைந்துள்ளனர். இவர்கள் திருநங்கைகளுக்கு ஏற்படும், பிரச்சினைகளையும், சிக்கல்களையும் களைய முயற்சி எடுப்பார்கள்.

பி.எம்.ஜி. யூனிட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த புதிய பிரிவில் உள்ள திருநங்கைகளுக்கு தலைவர், பொதுச் செயலாளர், இணைத் தலைவர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ. சஜூ நிருபர்களிட் கூறுகையில், “ சமூகத்தில் திருநங்கைகளையும் உள்ளடங்கி இருக்க வேண்டும். அதற்கான வசதியை அமைப்பு உருவாக்கி கொடுத்துள்ளது’’ என்றார்.

நடிகரும், மாடலிங் தொழில்லி இருப்பவரும், திருநங்கைகள் நீதி வாரியத்தின் உறுப்பினரானசூர்யா அபிலாஷ் கூறுகையில், “ புதிதாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் முதல் உறுப்பினராகவும், தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அமைப்பில் பதிவு செய்யும் படிவத்தில் கூட பாலினத்தை நிரப்புவது திருநங்கைகளின் உரிமையாகும். இந்த அமைப்பு திருநங்கைகளுக்கான பிரத்யேக அமைப்பு கிடையாது. திருநங்கைகள் அதிகமாக இருப்பார்கள்,அதேசமயம், இளைஞர்கள், பெண்கள் இருப்பார்கள். அரசியல் அமைப்பு இல்லாமல் செயல்படும்.

ஒவ்வொருத்தரும் சொந்தமாக அரசியல் இருக்கிறது. சமூகத்தின் உறுப்பினர்களாக பணியாற்ற வேண்டும் என்று இளைஞர்கள் நினைத்தால், நமது குறிக்கோள் நிறைவேறும். எனக்கு இணையதளத்தில் இதற்கு முன் பலவிதமான விமர்சனங்கள் வந்த நிலையில், இந்த பதவிக்கு வந்தபின், அது நின்றுவிட்டது’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios