The door of the plane flying in the air
வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் பாகம் ஒன்று வீட்டின் மாடி மீது விழுந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகில் லாலா பெட் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று மிக தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது. திடீரென விமானத்தில் இருந்து ஏதோ ஒன்று வேகமாக கீழே விழுந்துள்ளது.
விமானத்தில் இருந்து விழுந்த பாகம், மொட்டை லாலா பெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் விழுந்துள்ளது.
மாடியில் ஏதோ விழுந்த சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் சென்று பார்த்தனர். ஆனால், மாடியில் விழுந்து கிடந்த பாகம், என்னவென்று தெரியாமல், அவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார், வீட்டு மாடியில் கிடந்த பாகங்களை எடுத்துச் சென்று விசாரனை நடத்தினர். சோதனையின்போது, தெலங்கான ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான விமானம் ஒன்றின் கதவு என தெரியவந்தது.
விமானத்தின் பாகம் வீட்டு மாடி மீது விழுந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், வீட்டு கண்ணாடி மற்றும் தண்ணீர் தொட்டி மட்டும் உடைந்ததாக வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.
