Asianet News TamilAsianet News Tamil

திறப்புக்கு முன்பே தானாகவே திறந்து கொண்ட அணை! ஊருக்குள் பாய்ந்த வெள்ளத்தால் மக்கள் அவதி!

The dam is open automatically before opening
The dam is open automatically before opening
Author
First Published Sep 20, 2017, 2:46 PM IST


பீகாரில், பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணை அதிகப்படியான வெள்ளம் காரணமாக நேற்று திடீரென உடைந்து வெள்ளம் ஊருக்குள் பாய்ந்தது. தடுப்பணையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைப்பதாக இருந்த நிலையில் அணை திடீரென உடைந்தது.

பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணைப் பணிகள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டு, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது, பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணை, மக்கள் பயன்பாட்டுக்கு தயாராக இருந்தது. இந்த அணையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று திறந்து வைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகள் அரசு சார்பில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அதிகப்படியான வெள்ளம் காரணமாக, பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பனை நேற்று திடீரென உடைந்தது.

தடுப்பணை உடைப்பு காரணமாக, குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும், விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தடுப்பணை உடைந்ததை அடுத்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொள்ளவிருந்த திறப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios