indian navy new flag: இந்திய கடற்படைக்கு புதிய கொடி: 4வது முறையாக மாற்றம்: முக்கியத்துவம் என்ன?

இந்திய கடற்படைக்கு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த கொடி அகற்றப்பட்டு, மகாராஜா சத்ரபதி சிவாஜி முத்திரை பொறிக்கப்பட்ட புதிய கொடி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

The Colonial St. George's Cross was dropped for Chhatrapati Shivaji's seal on the new Indian Navy flag.

இந்திய கடற்படைக்கு ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த கொடி அகற்றப்பட்டு, மகாராஜா சத்ரபதி சிவாஜி முத்திரை பொறிக்கப்பட்ட புதிய கொடி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

கொச்சி நகரில் நடந்த விழாவில் கடற்படைக்கு புதிய கொடியை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வழங்கினார்.

இதற்கு முன் இருந்த பழைய கொடி புனித ஜார்ஜின் கிராஸ் அடையாளமும், அதில் தேசியக் கொடியும் இருந்து. அந்தக் கொடி நீக்கப்பட்டு தற்போது மூவர்ணக் கொடியும், எண்கோணத்தில் தேசியசின்னம் மற்றும் நங்கூரத்தின் அடையாளம் உள்ளதுபோன்று கொடி வடிமைக்கப்பட்டுள்ளது.

The Colonial St. George's Cross was dropped for Chhatrapati Shivaji's seal on the new Indian Navy flag.

ins vikrant: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

இதற்கு முந் இருந்த கடற்படை கொடி என்பது வெள்ளைத் துணியில் சிவப்பு நிறத்தில் நெடுங்கோடு மற்றும் குறுக்கோடு இருக்கும். இது புனித ஜார்ஜ் அடையாளமாக இருந்தது. அதன் கொடியின் வலது பக்கத்தில் தேசியக் கொடி இருந்தது.

தற்போது அறிமுகமான கடற்படைக்கான புதிய கொடியில், கொடியின் மேல்புற இடதுபக்கத்தில் தேசியக் கொடியும், எண்கோண சட்டமும், அதற்கு தங்கநிற வண்ணமும் தரப்பட்டுள்ளது. அந்த எண்கோணம் அடர்நீலத்தில் வண்ணமிடப்பட்டுள்ளது. அதில் தங்கநிறத்தில் தேசிய சின்னம், சத்தியமே ஜெயதே என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. நங்கூரத்தின் மீது தேசிய சின்னம் அமரவைக்கப்பட்டுள்ளது போன்று கொடி அமைக்கப்பட்டுள்ளது.

ins vikrant: இந்திய பாதுகாப்பு துறையை தன்னிறைவாக மாற்றும் உந்துதல் விக்ராந்த்: பிரதமர் மோடி பெருமிதம்

கடற்படையின் கொடியில் உள்ள எண்கோணம் என்பது 8 திசைகளையும் குறிக்கிறது. நங்கூரம் அடையாளம் என்பது, காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் சுதந்திரமாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. கொடியில் உள்ள அடர்நீலம் வண்ணம், இந்திய கடற்படை கடல்பரப்பில் வல்லமைவாய்ந்ததை குறிக்கிறது

கொடியில் உள்ள எண்கோணத்துக்கு இரு பார்டர்கள் கொடுக்கப்பட்டது என்பது சத்தரபதி சிவாஜி ராஜமுத்திரையைப் பார்த்து எடுக்கப்பட்டது என்று கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
4வது முறையாக மாற்றம்

The Colonial St. George's Cross was dropped for Chhatrapati Shivaji's seal on the new Indian Navy flag.

4-வது முறை மாற்றம்

கடந்த 1950ம் ஆண்டுக்குப்பின் கடற்படைக்கு 4வது முறையாக கொடி மாற்றப்பட்டுள்ளது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம்தேதி கடற்படைக்கு முதல்முறையாக கொடி மாற்றப்பட்டது. அதற்கு முன் புனித ஜார்க் கிராஸ் மட்டுமே சிவப்பு நிறத்தில் இருந்தது. அதற்கு மேல் தேசியக் கொடி பொறிக்கப்பட்டது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி..!

இந்த அடையாளம் 2001ம் ஆண்டுவரை இருந்தது. அதன்பின் 2001 ஆகஸ்ட் 15ம் தேதி அப்போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் கொடி மாற்றப்பட்டது. துணை அட்மிரலாக இருந்த விவியன் பார்போசாவின் ஆலோசனையில் கொடிமாற்றப்பட்டது. பின்னர் 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் பழையகொடி கொண்டுவரப்பட்டு நீல நிறம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. 

ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபின் கடற்படைக் கொடியில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் புனித ஜார்க் கிராஸ் கொண்டுவரப்பட்டு அதில் தேசியக் கொடியும், தேசியச்சின்னமும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது.  இந்நிலையில் பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒட்டுமொத்தமாக தற்போது கொடி மாற்றப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios