The banks net worth grew by 4.5 per cent to Rs 9.5 lakh crore in the past six months.

வங்கிகளின் வாராக்கடன் அளவு கடந்த 6 மாதங்களில் 4.5 சதவீதம் உயர்ந்து, ரூ.9.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது வங்கிகளின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கவலையளிக்கத்தக்க உயர்வாகும்.

வங்கிகளின் வாராக் கடன் குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றபோதிலும், ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவலை கேட்டுப் பெற்றுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

நம் நாட்டில் உள்ள வங்கிகளின் வாராக்கடன், செயல்படா கடன் கடந்த ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களில் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம்வரை வாராக்கடன் ரூ. 7.7 லட்சம் கோடியாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது ரூ.9.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் உலக வங்கி அளித்த அறிக்கையின்படி, ஆசிய அளவில் இந்திய வங்கிகளின் வாராக்கடன் அளவு கடந்த 2016ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானிய வங்கிகளின் வார்க்கடன் 11.3 சதவீதமாகும்.

நம்நாட்டில் உள்ள வங்கிகளின் வாராக்கடந் கடந்த 6 மாதங்களில் கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் 2.67 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், 2015ம் ஆண்டில் 5.88 சதவீதமாக அதிகரித்தது. 2016ம் ஆண்டில் அது 9.18 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

மின்துறை, உருக்குதுறை, சாலை கட்டமைப்பு, ஜவுளித்துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிறுவனங்களே கோடிக்கணக்கில் வங்கிகளிடம் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன. கடந்த 2016ம் ஆண்டு கணக்கின்படி, அரசுவங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.6 லட்சத்து 14 ஆயிரத்து 872 கோடியாகும்.

வங்கிகளின் வாராக்கடனை நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கவே மத்திய அரசு திவால்சட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஜேபி, இன்பிராடெக், எஸ்ஸார் ஸ்டீல்,ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிட், ஸ்டேஜில்லா ஆகிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.