2016ம் ஆண்டு நவம்பர் 8- ந்ேததி கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு தடைக்குப் பின், கருப்பு பண ஒழிப்பு என்பது வெறும் ஒரு சதவீதம் மட்டுமே என்று ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது ரூ.8 ஆயிரத்து 900 கோடி மட்டுமே வங்கிக்கு வராத கருப்புபணமாகும்.

ரூபாய் நோட்டு தடை

 நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகள், ஊழலை ஒழிக்க கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

இதன்படி, நாட்டில் ரூ.15.50 லட்சம் கோடி ரூ.1000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவை செல்லாத ரூபாய் நோட்டுகளாக அறிவிக்கப்பட்டது.

100-க்கும் அதிகமானோர் சாவு

அந்த செல்லாத நோட்டுகளை வங்கி, தபால் நிலையத்தில் கொடுத்து, புதிய ரூ.2000 நோட்டு, ரூ.500 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. இதன்படி மக்கள் வங்கி, தபால்நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுச் சென்றனர். இந்த ரூபாய் நோட்டுகளை பெறுவதற்காக மக்கள் வங்கியில்  நீண்ட வரிசையில் காத்திருந்ததில் ஏறக்குறைய 100-க்கும்மேற்பட்டோர் இறந்தனர்.

பதில் கூறவில்லை

இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக வங்கிக்கு வந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணும்பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்தது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியும் ரிசர்வ் வங்கி கவர்னர் முறைப்படி பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியும் நிதி அமைச்சர்ஜெட்லி பதில் கூறவில்லை.

இந்த சூழலில், ரிசர்வ் வங்கி நேற்று பரபரப்பு அறிக்கை வௌியிட்டது. அதில் கூறியருப்பதாவது-

ரூ.6.32 லட்சம்

கடந்த 2016-17ம் ஆண்டு நிலவரப்படி 632.6 கோடி  எண்ணிக்கையிலான 1000 ரூபாய்்நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதாவது, மதிப்பின் அடிப்படையில் ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்து 600 கோடி புழக்கத்தில் இருந்தது.

ரூ.8,900 கோடி

இந்நிலையில், இதில் ரூபாய் நோட்டு தடைக்கு பின் 8.9 கோடி எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வரவில்லை.  அதாவது, மதிப்பின் அடிப்படையில் வெறும் ரூ.8 ஆயிரத்து 900 கோடி நோட்டுகள் மட்டும் வங்கிக்கு வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  இது வெறும் 1.4 சதவீதம் மட்டுமே ஆகும். ஆக கருப்பு பணம் என்பது ெவறும் ரூ.8 ஆயிரத்து 900 கோடி மட்டுமே ஆகும்.

ரூ.500 நோட்டு

500 ரூபாய் நோட்டுகளைப் பொருத்தவரை, பழைய, புதிய  588.2 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகள் கடந்த மார்ச் 31-ந்தேதி வரை இருந்தன. இதில் மார்ச் 31, 2016 ம் ஆண்டுவரை ஆயிரத்து 570.7 கோடி எண்ணிக்கையில் 500 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது.

ரூ.2 ஆயிரம் நோட்டு

இதற்கிடையே இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள், 328.5 கோடி எண்ணிக்கையில் அச்சடித்து புழக்கத்துக்கு விடப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 6 லட்சத்து 57 ஆயிரம் கோடியாகும்.