விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 , இன்று நிலவின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது . 

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22 ம் தேதி சந்திராயன் 2 விண்கலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது . கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதியில் இருந்து நிலவின் வட்ட பாதையை நோக்கி பயணிக்க தொடங்கியது . 

இன்று காலை சரியாக 9 .30 மணியளவில் நிலவின் வட்டப்பாதையை சந்திராயன் 2 வெற்றிகரமாக அடைந்தது . அதன் பிறகு இஸ்ரோ தலைவர் சிவன் செய்தயாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறியதாவது :

"அந்த 30 நிமிஷமும் டென்ஷனும் பதட்டமும் கூடிகிட்டே இருந்துச்சு . சந்திராயன் 2 வெற்றிகரமா நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த பொது தான் பெரிய நிம்மதியா இருந்தது .

செப்டம்பர் 2 ம் தேதி , விண்கலத்தில் இருக்கும் லேண்டர் , சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப் படும் . அடுத்த நாள் அதன் அமைப்புகள் இயல்பாக இயங்குவதை உறுதி செய்ய சுமார் 3 வினாடிகள் ஒரு சிறிய ஆபரேஷன் செய்வோம் "

இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார் ..