கர்நாடகாவில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அங்கு மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் உள்ள சட்டப்பேரவை,  கர்நாடக உயர்நீதிமன்றம், விமான நிலையம், ரயில்நிலையம் உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட அதிகளவில் போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை வரும் 20ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. கர்நாடகாவில் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா தலைமையிலான அரசு, கடந்த மாதம் ஆட்சி அமைத்தது. அம்மாநிலத்தில் பெய்த தொடர்மழை, வெள்ளம் காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.