மூன்று இடத்தில் பாம் வெடிக்கும்... காவல்துறைக்கு வந்த போன் கால்... உச்சக்கட்ட பதற்றத்தில் மும்பை!!
மும்பையில் குண்டு வெடிக்கும் என்று வந்த மிரட்டல் போன் காலை அடுத்து அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டு நிலவி வருகிறது.
மும்பையில் குண்டு வெடிக்கும் என்று வந்த மிரட்டல் போன் காலை அடுத்து அம்மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டு நிலவி வருகிறது. மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் சுமார் 166 பேர் கொல்லப்பட்டார்கள். அதன் நினைவு நாள் இன்னும் ஒரு சில தினங்களில் வர உள்ளது. இந்த நிலையில் மும்பையின் மூன்று இடத்தில் வெடிக்குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்பைஸ்ஜெட் பைலட்களுக்கு ஹாப்பி நியூஸ்... வெளியானது ஊதியம் குறித்த புதிய அறிவிப்பு!!
மும்பை காவல்துறைக்கு வந்த போன் கால் ஒன்றில், அந்தேரியில் இருக்கும் இன்ஃபினிட்டி வார், ஜூகுவில் இருக்கும் பிவிஆர் மால் மற்றும் விமான நிலைய சகாரா ஹோட்டல் ஆகிய மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து போன் செய்த நபர் யார், எங்கிருந்து போன் செய்தார் என்பது குறித்த விவரங்களை கண்டறியும் நடவடிக்கையில் பாதுகாப்பு முகமைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ராஜ்கோட்டில் பிரதமர் மோடி ஊர்வலம்... இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் பலர் மலர் தூவி உற்சாக வரவேற்பு!!
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரகாண்டில் உள்ள ஹரித்வார், டேராடூன், ரூக்கி, நஜிபாபாத், காஷிபூர் மற்றும் கத்கோடம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதம் ஒன்று வந்ததை அடுத்து உத்தரகாண்டில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.