மத்திய பிரதேசத்தில் நேற்றிரவு கட்டிடம் இடிந்த விபத்தில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் சர்வேட் பேருந்து நிலையம் அருகே 3 அடுக்கு கட்டிடம் ஒன்று அமைந்திருந்தது.  இந்த கட்டிடத்தில் எம்.எஸ். ஓட்டல் ஒன்றும் செயல்பட்டு வந்துள்ளது.  இங்கு உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த துயர சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இரவு நேரத்தில் நடந்த இந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.