கோயில் உண்டியலில் சேரும். 10, 20, 50 100 ஆகிய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் உண்டியல் பணம் வங்கியில் டெபாசிட் செய்யலாம் -
டெல்லியில் பொருளாதாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வங்கிகளில் பணம் எடுப்பவரே திரும்ப திரும்ப வருவதால் கூட்டம் கூடுகிறது என்றும், வங்கிகளில் போதிய பணம் இருப்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம். பொதுமக்களுக்கு எற்பட்டுள்ள இன்னல்களை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஜன்தன் கணக்குகளை பயன்படுத்தி பெருந்தொகையை செலுத்த முயற்சிப்பதாகவும், எனவே ஜன்தன் கணக்குகளை மத்திய அரசு உண்ணிப்பாக கவனித்து வருகிறது என்றும் தெரிவித்த அவர்,கருப்பு பண முதலீட்டை தடுக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன. நாட்டின் தேவைக்கு அதிகமாகவே உப்பு இருப்பு உள்ளளது எனவே சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.
மேலும், கோயில் உண்டியலில் சேரும். 10, 20, 150 100 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்யலாம் என சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
