பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி  பொதுகூட்டம் மற்றும் விழாக்களிலும், கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்தது என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை காத்ததாலேயே அவரை போன்ற டீக்கடைக்காரர் பிரதமராகியுள்ளனர். இந்திரா காந்தி, ராஜூவ்காந்தி மற்றும் சோனியா காந்தியை குடும்ப அரசியல் என்று விமர்சினம் செய்கின்றனர். ஆனால் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம் நாங்கள் அனைவரும் தான் உறுப்பினர்கள் என்றார் மல்லிகார்ஜூன கார்கே, எமர்ஜென்ஸி காலம் பிரதமர் மோடி பேசுகிறாரே, கடந்த  4 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி நிலை குறித்து பேசாதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகள் வறுமையால் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகள் புதிய கடன்களைப் பெறுவது மிகவும் மந்தமாக இருக்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.ஆனால் மத்திய அரசின் விளம்பர செலவுகள் நிற்காமல் உயர்ந்து கொண்டே போகிறது. மோடி அரசு பதவி நீக்கம் செய்யப்பட்டால் மக்களின் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கும் என்றார். பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும். மகாராஷ்ராவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாடாளுமன்ற தேர்தலிலும் பெற்றி பெறும். மேலும் மகாராஷ்டிராவின் தேர்தல் முடிவுகள் தான் எப்போதும் மத்திய அரசை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.