மறைந்த முன்னாள் முதல்வர் கருணாந்தி வேடமிட்டு தெலுங்குதேச எம்.பி சிவபிரசாத் நாடாளுமன்ற வளாகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தால், தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. அதே நேரம், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தனர்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, அரசிற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி எடுத்தது. இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த குளிர்க்கால கூட்டத் தொடரிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் தினம் ஒரு வேடம் அணிந்து போராட்டம் நடந்து வருகிறது.

 

தெலுங்கு தேசம் எம்.பி.க்களில் ஒருவரான நரமல்லி சிவபிரசாத் மாயவித்தைகாரன் வேடம் அணிந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். இன்று நடந்து வரும் போராட்டத்தில் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான மறைந்த கருணாநிதி வேடமிட்டு சித்தூர் தொகுதியைச் சேர்ந்த தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி சிவபிரசாத் ஈடுபட்டார். கருணாநிதியைப்போல வேடமிட்டது மட்டுமல்லாது வீல் சக்கரம் பொறுத்திய இருக்கையில் அவர் அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டதுதான் ஹைலைட்! கடந்த கூட்டத் தொடரின் போது, பள்ளி மாணவன், மந்திரவாதி, விஸ்வா மித்ரர் வேடம், பெண் வேடம் என பல வேடங்களில் வந்திருந்தனர். அடுத்தடுத்து நடக்கும் போராட்டத்தில் ஜெயலலிதா வேடமிட்டு வந்தாளூண் ஆச்சர்யப்படுவதற்கில்லை.