விவிஐபி பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தும் ஜாக்கெட்… வெளியிட்டது டிசிஎல் நிறுவனம்!!

விவிஐபிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கேம் சேஞ்சராக இருக்கும் புதிய புல்லட் புரூப் ஜாக்கெட் ஒன்றை டிசிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

tcls jacket is set to revolutionize in VVIP security

விவிஐபிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கேம் சேஞ்சராக இருக்கும் புதிய புல்லட் புரூப் ஜாக்கெட் ஒன்றை டிசிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏரோ இந்தியா 2023 இல், இந்திய விமானப்படை பயன்படுத்தக்கூடிய ஐந்து புதிய தயாரிப்புகளை ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட்  (TCL) காட்சிப்படுத்தியது. ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட் என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அரசு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தற்போது விவிஐபிகளின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட் ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிரதமர் மோடி வந்தபோது அணிந்திருந்த ஜாக்கெட் செய்திகளில் இடம்பிடித்தது. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களால் செய்யப்பட்ட ஜாக்கெட்டை பிரதமர் அணிந்திருந்தார்.

இதையும் படிங்க: பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பெண்

இப்போது மற்றொரு ஜாக்கெட் தலைப்பு செய்தியாகி வருகிறது. பெங்களூரில் நடந்த இந்தியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான ஏரோ இந்தியா ஷோவில் இந்த ஜாக்கெட் வெளியிடப்பட்டது. இது வழக்கமான காட்டன் ஜாக்கெட் போல இருந்தாலும் இது, விவிஐபிகளின் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட். இதுக்குறித்து இந்த ஜாக்கெட்டை உருவாக்கிய ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட் (டிசிஎல்) பொது மேலாளர்-ஆபரேஷன்ஸ் ராஜீவ் சர்மா கூறுகையில், அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட், நாட்டில் விஐபி பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: இளம் ஆர்கன் டோனர் என்ற பெருமையை பெற்ற 17 வயது சிறுமி... தந்தைக்கு கல்லீரல் தானம்!!

புதிய புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் விவிஐபிகள் மற்ற துணி ஜாக்கெட்டுகளைப் போல தங்கள் உடைகளுக்கு மேல் அணிவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இலகுரக (1.8 கிலோ) ஜாக்கெட் பயனரின் தேவைக்கேற்ப வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. அல்ட்ரா-ஹை மாலிகுலர் வெயிட் பாலிஎதிலினால் செய்யப்பட்ட ஜாக்கெட், 9x19 மிமீ தோட்டாக்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது என்றார். மேலும் விவிஐபிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த ஜாக்கெட் கேம் சேஞ்சராக இருக்கும். ஜாக்கெட் ஐந்து ஆண்டுகள் ஷெல் ஆயுள் கொண்டது. பாதுகாப்புத் துறையில் மட்டுமின்றி, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சாமானியர்களுக்கும் இந்த ஜாக்கெட் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios