நாட்டில் ஒட்டுமொத்தமாக 133 தனியார் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மட்டும் ரூ.500 கோடிக்கு அதிகமாக இருக்கிறது. இதில் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 704 கோடி வரி நிலுவை இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பேசியதாவது-

நாட்டில் 132க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கடந்த மார்ச் 31-ந்தேதி வரை, அரசுக்கு கார்ப்பரேட் வரியாக ரூ.500 கோடிக்கு மேல் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்து 704 கோடி வரி நிலுவை இருக்கிறது. இதில் சேவை வரி ரூ.ஆயிரத்து 606 கோடியும், அதற்கு ஈடான அளவு அபராதமும் நிலுவையில் இருக்கிறது.

கார்பரேட் வரி செலுத்தப்படாமல் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 480 கோடி நிலுவையில் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.