தமிழகத்தில் 28 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 28 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதை விட வீரியமானது இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் என்று கூறப்படுகிறது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இருந்த போதிலும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் 28 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 24 பேர் குறைவான பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் நான்கு பேர் அதிக பாதிப்பு உள்ள நாடுகள் வந்து வந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது . ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டவர்கள் அனைவருக்கும் 48 மணி நேரத்திற்குள் பாசிட்டிவ் என்று வந்திருப்பது ஒமைக்ரான் அதிகளவு பரவும் தன்மை கொண்டது என்பதை காட்டுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிக பாதிப்பு கொண்ட பிரிட்டன் உட்பட 11 நாட்கள் ஆபத்தான பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இருந்து வருவோருக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வரும பயணிகளில் 2% பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக இல்லை. இதனால் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க வாய்ப்புண்டு. இதன் காரணமாக எந்தவித வேறுபாடுமின்றி வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அனுமதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி வழங்க வேண்டும். ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு அவர்கள் மாற வேண்டுமென்றால் கூட நெகட்டிவ் என்ற சான்றிதழ் இருக்க வேண்டும். நெகட்டிவ் என்றால் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டபின் 8ம் நாள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை அப்போது தொற்று உறுதி செய்யப்பட்டால் நடைமுறைப்படி சிகிச்சை வழங்கப்படும் . நெகட்டிவ் என்றால் மேலும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி அதை வழிகாட்டு நெறிமுறைகளாக வழங்கிட வேண்டுமென மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் எழுதி உள்ளார்
