ncrb: suicides in india: தற்கொலையில் தமிழகம் 2வது இடம்: தேசியஅளவில் தினக்கூலிகள் அதிகம்: என்சிஆர்பி தகவல்
2021ம் ஆண்டில் நாடுமுழுவதும் நடந்த தற்கொலையில் தமிழகம் 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும் உள்ளன என்று தேசிய குற்றஆவணக் காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.
2021ம் ஆண்டில் நாடுமுழுவதும் நடந்த தற்கொலையில் தமிழகம் 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும் உள்ளன என்று தேசிய குற்றஆவணக் காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழகத்தில் மட்டும் கடந்த 2021ம் ஆண்டு 18ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஒட்டுமொத்த தற்கொலையில் 11.5 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிராவில் 22 ஆயிரத்து 207 பேர் தற்கொலை செய்துள்ளனர். 3-வது இடத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் 14 ஆயிரத்து 965 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 4வது இடத்தில் மேற்கு வங்கத்தில் 13,500 பேரும், கர்நாடகத்தில் 13,056 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
முதல் 5 இடங்களில் இருக்கும் 5 மாநிலங்களில்தான் நாட்டின் 50 சதவீத தற்கொலைகளும் நடந்துள்ளன. மீதமுள்ள 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 49.6 சதவீத தற்கொலைகள் நடந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக கடந்த 2021ம் ஆண்டு நாட்டில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து33 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டைவிட 7.2 சதவீதம் தற்கொலைகள் அதிகமாக நடந்துள்ளது. 2020ம் ஆண்டில் ஒரு லட்சத்து 53ஆயிரத்து 52பேர் தற்கொலை செய்திருந்தனர்.
நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களில் நான்கில் ஒருபகுதியிநர் தினக்கூலிகள் என்பது வேதனைக்குரியதாகும். தேசிய அளவில் கூலித்தொழிலாளர்கள் மட்டும் 42 ஆயிரத்துக்கும் அதிமானோர் தற்கொலை செய்துள்ளனர். இது ஒட்டுமொத்த தற்கொலையில் 25.6% என்று என்சிஆர்பி தெரிவித்துள்ளது.
சீன போன்களின் விற்பனையை தடை செய்யும் திட்டம் இல்லை… மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம்!!
2020ம் ஆண்டில் கூலித்தொழிலாளர்கள் 37ஆயிரத்து 666 பேர் தற்கொலை செய்தனர், 24.6% என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு அதைவிட அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் 23.4% அதாவது 32,563 ஆக இருந்தது.
நாட்டின் 53 பெரு நகரங்களில் மட்டும் கடந்த ஆண்டில் 25,891 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதாவது ஒரு லட்சம் பேருக்கு 12 பேர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை வீதத்தைப் பொருத்தவரையில், அந்தமானில் 39.7%, சிக்கம் 39.2%, புதுச்சேரி 31.8%, தெலங்கானா 26.9%, கேரளா 26.9% என்று இருக்கிறது
தேசியஅளவில் கடந்த 2020ம் ஆண்டைவிட 2021ம் ஆண்டில் தற்கொலை எண்ணிக்கை 7.17% அதிகரித்துள்ளது. இதில் தினக்கூலி பெறும் கூலித்தொழிலாளர்கள் தற்கொலை 11.52% அதிகரித்துள்ளது.
2021ம் ஆண்டில் வேளாண் தொழிலில் ஈடுபட்டவர்களில் 10,881 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இதில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயி அல்லது நிலஉரிமையாளர் அல்லது நிலத்தை குத்தகைக்கு எடுத்து பணி செய்பவர் என்ற வகையில் 5,318 பேரும், வேளாண் கூலித் தொழிலாளர்கள் 5,563 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
கடந்த 2019ம்ஆண்டிலும்,2020ம் ஆண்டிலும் விவசாயிகள் தற்கொலைகள் குறைந்த நிலையில், 2021ம் ஆண்டில் அதிகரி்த்துள்ளது.
சுயதொழில் செய்பவர்கள் 2021ம்ஆண்டில் 20,231 பேர் தற்கொலை செய்துள்ளனர், இது 2020ம் ஆண்டில் 17,332 ஆகத்தான் இருந்தது. 2019ல் 16,098 ஆக குறைந்திருந்தது. சுய தொழில் செய்பவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை கடந்த ஓர் ஆண்டுக்கு முன் 11.3% என இருந்தது, கடந்த 2021ம் ஆண்டில் 12.30% என அதிகரித்துள்ளது.
வேலையில்லாதவர்கள் தரப்பில் தற்கொலை 2020ம் ஆண்டில் 15,652 பேர் என்ற நிலையில் இருந்து 2021ம் ஆண்டில் குறைந்துள்ளது. 2021ம் ஆண்டில் 13,741 பேர் வேலையின்மையால் தற்கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு என்சிஆர்பி இணையதளத்தி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது