கணவரை பழி வாங்குவதற்காக, கள்ளக் காதலனுடன் சேர்ந்த தனது 4 வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. கொடுமைக்கார அந்த தாயையும், கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத், மாலாக்பெட் பகுதியைச் சேர்ந்தவர் சரிதா (25). இவருக்கு 4 வயதில் மகள் உள்ளார்.
இவர் கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வருகிறார். தனது கணவருடனான சண்டையில் பெற்ற குழந்தையை பழி தீர்க்க பயன்படுத்தியுள்ளார். 

சிறுமியின் உடல் முழுவதும் ஏராளமான தீக்காயங்கள் இருந்துள்ளன.

 4 வயது குழந்தையின் உடம்பில் உள்ள காயங்களைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுமியின் தாய் சரிதாவையும், அவருடைய கள்ளக் காதலனையும் கைது செய்தனர்.

உடல் முழுவதும் காயமடைந்த சிறுமியை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்ததும் சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இதனை வீடியோ பதிவாகவும் போலீசார் பதிவு செய்தனர்.

வீடியோவில் சிறுமி கூறும்போது, முதலில் அப்பா அடித்தார். பின்னர் கரண்டியை அம்மா சூடு பண்ணி கொடுத்ததும், அதை  கொண்டு என்னுடைய பின் பக்கத்தில் சூடு போட்டார் என்று கூறியுள்ளார். சிறுமியின் கை, கால்கள், பாதங்கள், உடல் முழுவதும் ஏராளமான தீக்காயங்கள் உள்ளது.

 கணவரை பழி வாங்குவதற்காக 4 வயது சிறுமிக்கு, தாய் சூடு வைத்து கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம், கள்ளக்காதலுக்காக சென்னையை சேர்ந்த அபிராமி என்ற பெண் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், மற்றொரு அபிராமி ஒருவரின் கொடூர முகம் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது .