இந்தியாவில் உள்ள ஒரு லட்சம் கிராமங்களில் அதிநவீன ஈஎம்வி சிப்களை பயன்படுத்தும், ஸ்மார்ட் கார்டுகளைக் கையாளும் 2 கார்டு ஸ்வைப் மெஷின்கள் நிறுவ நபார்டு ரூ.120 கோடி ஒதுக்கியுள்ளது.

இது குறித்து, நபார்டு வங்கியின் தலைவர் ஹர்ஷ்குார் பான்வாலா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

இந்தியாவில் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான வங்கியாக நபார்டு உள்ளது. கிராமங்களில் ரொக்கப் பணம் இல்லாத ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனைக்கு உதவ திட்டமிட்டுள்ளது.

பழைய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த மின்காந்த ஸ்வைப் மெஷின்கள் முன்பு பயன்படுத்தப்பட்டன. இந்த மெஷின்களில் பயன்படுத்தப்படும் பழைய கார்டுகளை மிகவும் எளிதாக காப்பி எடுத்துவிடலாம். அதனால் இந்தக் கார்டுகள் எடுக்க முடியாது.

புதிய ஈஎம்வி கார்டுகளில் ஒரு சிப் இருக்கும். இந்த சிப்களில் வாடிக்கையான அம்சங்களுடன் சிப் ஒன்றும் பதியப்பட்டிருக்கும். இந்த சிப்களில் வாடிக்கையாளரைப் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால் இண்டர்நெட் இணைப்புக்காக காத்திருக்க வேண்டியதில்லை. கார்டின் உண்மைத் தன்மையை மிகவும் எளிதாகக் கண்டறியலாம். அதனால் கார்டுகளின் இயக்க நேரம் குறைகிறது. இந்த ஈஎம்வி கார்டுகளை எளிதில் பிரதி எடுக்க முடியாது.

இந்த ஸ்வைப் மெஷின்கள் 10 ஆயிர் பேர் வசிக்கும் ஒரு கிராமத்தில் இரண்டு அமைக்கப்படும்.

இந்த ஸ்வைப் மெஷின்களில் கிசான் கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்தலாம். பிராந்திய கிராமப்புற வங்கிகளும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளும் கார்டுகளையும் ஸ்வைப் மெஷின்களையும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.