இதயநோய் அறுவைசிகிச்சை செய்துகொண்ட பாகிஸ்தான் குழந்தை ரோஹன் மற்றும் அவரது பெற்றோர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

பாகிஸ்தானைச்சேர்ந்தவர் கமல் சித்திக். இவரது 4 மாத குழந்தையான ரோஹனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக, இந்தியாவில் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார்.  

குழந்தையின் உடல் நிலையை கருத்தில்கொண்டு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கமல் சித்திக் குடும்பத்துக்கு உடனடியாக விசா வழங்கியது. 

இதனால் சமீபத்தில் பாகிஸ்தான் குழந்தையான ரோஹனுக்கு, நொய்டாவில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. ரோஹனின் அறுவை சிகிச்சைக்குப்பின் , அவரது தந்தை கமல் சித்திக் மரியாதை நிமித்தமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்தார். 

அப்போது அந்த குழந்தையை கண்டு உச்சிமுகர்ந்து மகிழ்ந்த அமைச்சர் சுஸ்மா ,’ நீ என்றும் சிரித்துக்கொண்டே இரு’ எனச்சொல்லி கொஞ்சி வாழ்த்தினார்.