ராஜூவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அவர விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அனைத்து தர்ப்பு விவாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் அரசமைப்பில் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு வாதிட்டது. தமிழக அரசும், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் குடியரசுத் தலைவரை தலையிட வைப்பது ஏன்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று வாதிட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என குற்றவியல் நடைமுறை சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. முன்னதாக இந்த வழக்கு கடந்த 11 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் இன்றைய தீர்ப்பு எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

இந்நிலையில் ராஜூவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை வழங்கியுள்ளது. அரசயிலமைப்பு 142 ஐ பயன்படுத்தி, முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.