Asianet News TamilAsianet News Tamil

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு; உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Supreme Court Upholds Death Penalty For Nirbhaya Case Convicts
SC Upholds Death Penalty For Nirbhaya Case Convicts, Rejects Pleas
Author
First Published Jul 9, 2018, 2:50 PM IST


டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் கொலை வழக்கில் 4 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. டெல்லி நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. முகேஷ், பவான் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  SC Upholds Death Penalty For Nirbhaya Case Convicts, Rejects Pleasமுன்னதா தலைநகர் டெல்லியில், 2012-ஆண்டு  டிசம்பர் 16-ம் ஓடும் பேருந்தில்  மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். SC Upholds Death Penalty For Nirbhaya Case Convicts, Rejects Pleasஇந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதில் தொடர்புடைய சிறுவன் ஒருவன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். SC Upholds Death Penalty For Nirbhaya Case Convicts, Rejects Pleasஇதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், 2014-ல் ஆண்டு சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை எதிர்த்து 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவில் மரண தண்டனையாக குறைக்கக் கோரி 3 பேர் மனுத்தாக்கல் செய்தனர். SC Upholds Death Penalty For Nirbhaya Case Convicts, Rejects Pleasஇந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் டெல்லி நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்து, அவர்களது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios