ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்த இந்து கோயில் ஒன்றை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

வழக்கு: இதற்கிடையே இது தொடர்பாக நான்கு பெண்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜூலை 21ஆம் தேதி ஆய்வு நடத்தப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு நேற்றைய தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். நேற்று காலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அது என்னவென்றால், கீழமை நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. இதன்மூலம் ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதி கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஆய்வுக்கான உத்தரவு வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிரானது என்று மசூதி கமிட்டி தரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தப்படாது என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வாதிடப்பட்டது. 

ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்தது. ஞானவாபி மசூதிக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆய்வை நடத்த வேண்டு என்று உத்தரவிட்டுள்ளது.

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

Hero Bikes : ரூ.57 ஆயிரத்துக்கு கிடைக்கும் பைக்குகள்.. வேற மாறி ஆஃபர் - முழு விபரம் இதோ !!