supreme court postponed highway bar case
நெடுஞ்சாலைகளில் சொகுசு பார்களில் மது விற்பனைக்கு அனுமதி கோரி தமிழ்நாடு உணவு விடுதி பார் மற்றும் கிளப் நல சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஜூலை 2 வது வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி, 500 மீட்டர் தூரத்தில் உள்ள, மது கடைகள், பார்களை மூட, உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
அதன்படி தமிழகத்தில் மட்டும் மாநில நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த 3,231 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அதிகாரபூர்வமாக, ஒன்பது கிளப், 29 ஓட்டல்களில் இருந்த மது பார்கள் மூடப்பட்டன.

இதை எதிர்த்து நெடுஞ்சாலைகளில் சொகுசு பார்களில் மது விற்பனைக்கு அனுமதி கோரி தமிழ்நாடு உணவு விடுதி பார் மற்றும் கிளப் நல சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு தரப்பு மனுதாரர்களின் பதிலை கேட்க வேண்டியுள்ளதால் இதுகுறித்த விசாரணையை ஜூலை 2 வது வாரத்திற்கு ஒத்தி வைத்து தீர்ப்பளித்தது.
