Asianet News TamilAsianet News Tamil

"பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்க முடியாது" - மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

supreme court dismissed the compulsory hindi case
supreme court-dismissed-the-compulsory-hindi-case
Author
First Published May 4, 2017, 1:46 PM IST


நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இதன் மூலம் நாட்டின் ஒற்றுமை மற்றும் வலிமை அதிகரிக்கும். மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நீதித்துறையில் இருப்பவர்கள்கூட பெரிய அளவில் மொழிப் பிரச்சனையை சந்திக்கின்றனர், மொழிப் பிரச்சனைக்கான தீர்வு இந்தியை கட்டாய பாடமாக்குவதாகத்தான் இருக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாய பாடமாக்குவதற்கான மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், கல்வி தொடர்பான விஷயத்துக்கு மத்திய அரசை அணுகி, அதற்கான பணிகளில் ஈடுபடும்படி கூறி உத்தரவிட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios