Asianet News TamilAsianet News Tamil

"மல்லையாவை ஆஜர்படுத்துங்க.." - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

supreme court condemns central government
supreme court condemns central government
Author
First Published Jul 14, 2017, 3:05 PM IST


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவை ஆஜர்படுத்த வேண்டும் எனவும் இல்லையேல் தீர்ப்பு கூற முடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

இதுதொடர்பாக பலமுறை நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவை ஆஜராக உத்தரவிட்டும் அவர் ஆஜராகததால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

supreme court condemns central government

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏகே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.  

அப்போது, விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் விஜய் மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் இல்லையேல் தீர்ப்பு கூற முடியாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மல்லையா ஆஜரானால்தான் வழக்குகள் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios