Asianet News TamilAsianet News Tamil

ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு தடை - உச்சநிதிமன்றம் அதிரடி!!

supreme court bans IIT admission
supreme court bans IIT admission
Author
First Published Jul 7, 2017, 1:47 PM IST


என்ஐடி, ஐஐஎஸ்சி, ஐஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேர ஜெஇஇ என்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இது, மெயின், அட்வான்ஸ்டு என 2 தேர்வுகளை உள்ளடக்கியது.

ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஎஸ்சி, ஐஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்ந்துவிடலாம். ஆனால், ஐஐடி-யில் சேர விரும்புவோர் 2-ம் நிலை தேர்வான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மே 21ம் தேதி சென்னை உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. சென்னை ஐஐடி நடத்திய இத்தேர்வை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 540 பேர் எழுதினர்.

supreme court bans IIT admission

இதில், இந்தியில் கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு இந்தியில் பதில் அளித்தவர்களும், ஆங்கிலத்தில் பதில் எழுதியவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, ஐஐடி கலந்தாய்வு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்கக வேண்டும் என வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் விஷ்ணு, பலராம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில், இதுபோன்று 2 வினாக்களுக்கு 7 மதிப்பெண்கள் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். இந்தி வினா தாளில் பிழை இருந்தும், எப்படி மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதில், முறைகேடு நடந்துள்ளது என தெரிவித்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி, சென்னை ஐஐடி உள்பட நாடு முழுவதும் உள்ள ஐஐடி கலந்தாய்வு மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்தார். மேலும், இந்தி வினா தாளில் பிழை இருந்தாலும், அவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது முறைகேடான செயல். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios