subramaniyan swamy tweet about gst
ஜி.எஸ்.டி வரியால் பாஸ்தா , பீஸ்சா விலை குறைந்து விட்டது என்று சந்தோஷமாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி
ஜி.எஸ்.டி வரி நேற்றிரவு முதல் நாடெங்கும் அமல் படுத்தப்பட்டது. இந்த வரியால் வரி வருவாய் அதிகாரிக்கும் என்று கூறப்பட்டாலும் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. பொது மக்கள் ஏராளமாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சாதாரண வியாபாரிகள் , பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிகவரி விதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜி.எஸ்.டி வரியால் பாதிக்கப்படுவதாக நாடெங்கும் வணிகர்கள் குற்றம்சாட்டி போராடி வருகின்றனர்.
ஆனால் பாஜகவினரோ இது சிறந்த வரி நாடெங்கும் ஒரு குடையின் கீழ் வருகிறது என்று தெரிவிக்கின்றனர். ஆனால் பொருளாதார மேதை , ஆக்ஸ்போர்ட் ரிட்டர்ன் என்றெல்லாம் கூறிக்கொள்ளும் சுப்ரமணியம் சாமி வழக்கம் போல் மக்களின் பிரச்சனையில் நக்கல் நையாண்டி செய்துள்ளார்.
ஜி.எஸ்.டி வரி பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் ஹுர்ரே பாஸ்தா , பீஸ்சா விலை அதிரடியாக குறைகிறது என்று குதுகூலித்துள்ளார். சாதாரணமாக ஹோட்டலில் சாப்பிடும் பொருட்களுக்கு 28% ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு புலம்பும் நிலையில் இவர் சந்தோஷத்துடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளது அனைவரையும் எரிச்சலடைய வைத்துள்ளது.
முன்பு இதே காவிரி பிரச்சனையில் கடல் நீரை நண்ணீரக்கி கொள்ளுங்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழர்கள் பொறுக்கீஸ் என்று போட்டு பிரச்சனையை ஏற்படுத்தினார். தற்போது ஜி.எஸ்.டி வரியில் மக்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டுள்ளார்.
