காஷ்மீரில் ராணுவத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் கடந்த மாதம் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சில ராணுவ வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் என்ன நடவடிக்கை என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. 

இந்நிலையில், காஷ்மீரில் ராணுவத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.