ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு சக மாணவன், பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த
சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடன் பயிலும் மாணவன் ஒருவன் தனக்கு பாலியல்
பலாத்காரம் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

மாணவர்களின் மிரட்டலால் பயந்துபோன மாணவி, பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பெண்
கூறினார்.

அந்த மாணவன் தன்னை பலமுறை அடித்ததாகவும், ஒருநாள் எனது தந்தையை சந்தித்து உங்கள் மகள் மீது ஆசிட்டை வீசி விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனால்
பயந்துபோன பாதிக்கப்பட்ட அந்த பெண், மீரட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். மாணவியின் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர்.