உலகளவில் கொரோனா பாதிப்பு 19 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலி,  ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் பாதிப்பு கடுமையாக உள்ளது. 

மிகச்சாதாரணமாக தொடங்கிய கொரோனா பாதிப்பு, இந்தியாவில் கடந்த சில தினங்களாக தாறுமாறாக உயர்ந்துவருகிறது. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறுவதற்குள், முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் இன்னும் சமூக தொற்றாக மாறவில்லை. நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படவுள்ளது.

ஆனாலும் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்மை தகவலின்படி, மகாராஷ்டிராவில் 2064 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் முதல் மாநிலமாக 2000ஐ கடந்துள்ளது மகாராஷ்டிரா. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடும் டெல்லியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் 1154 பேருக்கும் தமிழ்நாட்டில் 1075 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.

மகாராஷ்டிரா - 2064

டெல்லி - 1154

தமிழ்நாடு - 1075

ராஜஸ்தான் - 815

உத்தர பிரதேசம் - 483

தெலுங்கானா - 504

மத்திய பிரதேசம் - 564

கேரளா - 376

ஜம்மு காஷ்மீர் - 245

லடாக்  - 15

கர்நாடகா - 247

ஹரியானா - 185

குஜராத் - 538

ஆந்திரா - 427

பஞ்சாப் - 170

மேற்கு வங்கம் - 152

உத்தரகண்ட் - 35

ஹிமாச்சல பிரதேசம் - 32

சத்தீஸ்கர் - 31

சண்டிகர் - 21

பீகார் - 64

ஒடிசா - 54

புதுச்சேரி - 7

கோவா- 7 

அந்தமான் நிகோபார் - 11

அசாம் - 30

ஜார்கண்ட் - 19.