ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரால் சனிக்கிழமை மாலை 5.30 முதல் 5.45 மணி வரையிலான அந்த 15 நிமிடங்களை  இனி வாழவிருக்கும் நாட்களில் மறையாத சோகமாகவே மாறியிருக்கிறது.

கணவர் போனி கபூரின் சகோதரியின் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றார். மூத்த மகள் ஜான்விக்கு ஷூட்டிங் இருப்பதால் தனது இளைய மகள் குஷியை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பின் துபாயில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹோட்டல் அறை பாத்ரூமில் பாத் டப்பில் அவர் மயங்கி கிடந்ததாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததாக கூறப்படுகிறது.  ஆனால் அவர் மாரடைப்பினால்தான் இறந்தார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அமீரகத்தில் வெளியாகும் ஆங்கில நாளிதழான கலீஜ் டைமிஸில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, திருமணம் முடிந்ததும் மும்பை சென்ற போனி கபூர் தனது மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க சனிக்கிழமை மாலை துபாய்க்கு மீண்டும் வந்தார்.

மாலை 5.30 மணி அளவில் தூங்கி எழுந்துள்ளார் ஸ்ரீதேவி. தூங்கி எழுந்த பிறகு அவர் தனது கணவருடன் 15 நிமிடங்கள் பேசியுள்ளார். டின்னருக்கு வெளியே செல்லலாமா என்று போனி கேட்க அவரும் சரியென்று தெரிவித்துள்ளார்.

நான் ரெடியாகிவிட்டு வருகிறேன் என்று கூறி பாத்ரூமுக்கு சென்ற ஸ்ரீதேவி அரைமணி நேரத்திற்கும் மேலாக வெளியே வரதாததால் போனி கதவை தட்டியுள்ளார்.

ஆனால், கதவை திறக்கவில்லை உள்பக்கம் பூட்டப் பட்டிருந்ததால் தரக்க முடியவில்லை, இதனையடுத்து அவர் கதவை உடைத்து சென்றுள்ளார்.

பாத்ரூமுக்குள் சென்று பார்த்தால் பாத்டப் (குளியல் தொட்டி) முழுவதும் நீர் இருக்க அதில் ஸ்ரீதேவி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார். ஸ்ரீதேவியை காப்பாற்ற அவர் முயன்றும் முடியவில்லை.

உடனே போனி கபூர் தனது நெருங்கிய நண்பருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். இதனையடுத்து இரவு 9 மணி அளவில் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இவ்வாறு அந்த நாளேட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது.