Asianet News TamilAsianet News Tamil

5000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் திடீர் புகை... மூச்சு முட்டியதால் அலறிய பயணிகள்..!

தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை ஜபல்பூருக்குச் புறப்பட்டது. வானில் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, விமானத்தின் உள்பகுதி கேபினில் புகை வெளிவர தொடங்கியது. 

SpiceJet flight smoke inside cabin
Author
Delhi, First Published Jul 2, 2022, 11:20 AM IST

டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கேபினில் இருந்து திடீரென புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை ஜபல்பூருக்குச் புறப்பட்டது. வானில் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, விமானத்தின் உள்பகுதி கேபினில் புகை வெளிவர தொடங்கியது. 

இதையும் படிங்க;- நுபுர் சர்மா வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது; லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்

SpiceJet flight smoke inside cabin

இதனை கண்டு பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பயணிகளுக்கு மூச்சு முட்டியதால் அலற தொடங்கினர். இதனையடுத்து, உடனடியாக டெல்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதையும் படிங்க;-  ஒரே பாணியில் கவிழ்ந்த கர்நாடகா. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா அரசுகள்.. 3 எதிர்க்கட்சி அரசுகள் காலியான கதை!

SpiceJet flight smoke inside cabin

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கடந்த 15 நாட்களில் ஸ்பைஸ் ஜெட் விமானம் இதுபோன்று அவசரமாக தரையிறங்குவது இது 2வது முறையாகும். கடந்த ஜூன் 19ம் தேதியன்று டெல்லி நோக்கிச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios