பெங்களூருவில் இருக்கும் ஜேஜே நகரில் உள்ள மார்க்கண்டேய பகுதியில் கங்கம்மாதேசி உற்சவம் நடைபெற்றது . இந்த விழாவை அங்குள்ள தமிழர்கள் சேர்ந்து நடத்தியுள்ளனர் . இதற்காக காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்றிருக்கின்றனர்  .

நிகழ்ச்சி நடந்த அன்று தமிழ் பாடல்களை அங்கு  ஒலிக்க செய்துள்ளனர் . அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த கர்நாடக ரஷன அமைப்பினர் சிலர் ஒன்று சேர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் புகுந்து கலாட்டா செய்துள்ளனர் . அங்கிருந்த ஸ்பீக்கரை அடித்து நொறுக்கியதுடன் தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்  .

இந்த சம்பவம் குறித்து காவல்துறை 5 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது . எனினும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது . இதற்கு தமிழ் அமைப்புகள் எதிர்த்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர் .