ViralVideo:மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் வைரல் வீடியோ! தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் மகன் மீது வழக்குப்பதிவு
தெலங்கானா பாஜக தலைவர் மற்றும் எம்.பி பந்தி சஞ்சயின் மகன் பகிரத், கல்லூரி மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா பாஜக தலைவர் மற்றும் எம்.பி பந்தி சஞ்சயின் மகன் பகிரத், கல்லூரி மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக எம்.பி. பந்தி சஞ்சயின் மகன் பகிரத் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இரு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதல் வீடியோவில், ஒரு மாணவர் உதவி கேட்டு எம்.பி. மகன் பகிரத்திடம் வந்துள்ளார். அதற்கு அவரிடம் வாக்குவாதம் செய்த பகிரத் அவரின் கன்னத்தில் அறைந்து தாக்கும் வீடியோ வெளியானது. அதுமட்டுமல்லாமல் அந்த மாணவரை மிரட்டும் விதத்தில் பேசிய பகிரத், அவரை கொலை செய்துவிடுவதாகக் கூறியுள்ளார்.
ஜன.19 கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு செல்கிறார் பிரதமர் மோடி… முழு பயண விவரம் இதோ!!
2வது வீடியோவில் நடந்த சம்பவம் மகிந்திரா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியில் நடந்துள்ளது. மாணவர் விடுதிக்குச் சென்ற பாஜக எம்.பி. மகன் பகிரத், மாணவர்கள் குழுவினருடன் சேர்ந்து ஒரு மாணவரை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கல்லூரி மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக, பெரிய தாதா போல் நடந்து கொண்டு தாக்கும் பகிரத்தின் செயல்பாடுகளை பலரும் கண்டித்துள்ளனர். சமூகவலைத்தளத்திலும் இந்த இருவீடியோக்களும் வைரலாகி வருகின்றன
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துண்டிகல் காவல்துறையில் பகிரத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் வீடியோ குறித்து ஆய்வு செய்தபோது அந்த சம்பவம் மகிந்திரா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளதுதெரியவந்தது. இதையடுத்து, பாஜக எம்.பி. சஞ்சயின் மகன் பகிரத் மீது ஐபிசி 341, 323, 504, 506,R/w 34 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
காவல்துறை துணைஆணையர் கூறுகையில் “மகிந்திரா பல்கலைக்கழக்தில் இரு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை. போலீஸார் நடத்திய விசாரணையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாஜக எம்.பி. மகன் பகிரத் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் முதல் தகவல் அறிக்கை செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்