SON BEATEN THE MOTHER IN RAJASTHAN

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில் தாயை பெற்ற மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

82 வயதான பெற்ற பங்சத் என்ற இவர், கடந்த சில வருடங்களாக பக்கவாதம் ஏற்பட்டு அவதிபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இவருடைய சொந்த மகன், அந்த வயதான தாயை அடித்தே சாகடித்து உள்ளார்.

தன் மகன் அடித்து உதைத்ததில்,பங்சத் அடுத்த இரண்டு நாட்களில் வலியால் துடித்து இறந்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் மீது மக்கள் பெரும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெற்ற தாயையே அடித்து உதைத்த இந்த காட்சியை அங்குள்ள நபர் யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பாக, தாயை அடித்து உதைத்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொன்று வருகின்றனர்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் கோபமான தங்கள் வெளிப்பாட்டை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.