பாம்பு கடித்து பலியான அண்ணன்.. இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த தம்பியும் அதேபோல பலி.. விடாமல் துரத்தும் பாம்பு.!

பாம்பு கடித்து பலியான அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பியும் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Snake bites brother... attended funeral  man killed by snakebite

பாம்பு கடித்து பலியான அண்ணனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்ற தம்பியும் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசம் மாநிலம் பவானிபூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் மிஸ்ரா(38) என்பவரை கடந்த சில நாட்களுக்கு பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரவிந்த் மிஸ்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததார். இதனையடுத்து, அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. பின்னர், உயிரிழந்த அரவிந்த் மிஸ்ராவின் இறுதிசடங்கு முடிந்த பிறகு இளைய சகோதரரான கோவிந்த் மிஸ்ரா வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க;- இப்படி கூடவா ஒரு புருஷன் இருப்பான்.. மனைவியுடன் உல்லாசமாக இருந்தை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்து மிரட்டல்.!

Snake bites brother... attended funeral  man killed by snakebite

அப்போது, அவரது அறைக்குள் நுழைந்த பாம்பு அவரை கடித்துள்ளது. மேலும், அவரது அருகில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகர் பாண்டே என்பவரையும் அந்த பாம்பு கடித்துள்ளது. இருவரும் அலறி துடிக்கவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Snake bites brother... attended funeral  man killed by snakebite

இதில், கோவிந்த் மிஸ்ரா பரிதாபமாக உயிரிழந்தார். சந்திரசேகர் பாண்டே கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே பகுதியில் பாம்பு கடியால் சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  திருப்பதி கோவில் வரலாற்று சாதனை.. இதுவரை இல்லாத அளவு குவிந்த உண்டியல் காணிக்கை.. எவ்வளவு கோடி தெரியுமா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios