மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதயளிப்புத் திட்டத்தில் 19 மாநிலங்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை அதிகமாகச் செலவழித்துள்ளன. நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் முழுமையாக ஒரு மாதம் இருக்கும் போது, இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கிய பணம் முடிந்துவிட்டது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதயளிப்புத் திட்டத்தில் 19 மாநிலங்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை அதிகமாகச் செலவழித்துள்ளன. நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் முழுமையாக ஒரு மாதம் இருக்கும் போது, இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கிய பணம் முடிந்துவிட்டது.
நடப்பு நிதியாண்டில் 100-நாட்கள் வேலைத் திட்டத்துக்காக ரூ.98 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் வரும் 2022-23 நிதியாண்டுக்கு ரூ.73 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டிலும் இதேதொகைதான்முதலில் ஒதுக்கப்பட்டாலும் பின்னர் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
100 நாட்கள் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டால் இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்குவதிலும் தாமதம் ஏற்படும், வேலை வழங்கும் நாட்களும் குறையும். பொருளாதாரம் மீட்சிபெறும் வேகம் குறைவாக இருக்கும்.

மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, “ 2022, பிப்ரவரி 21ம் தேதி வரை, 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு ஒதுக்கிய நிதியை ஜார்கண்ட்(128%), குஜராத்(110%), உ.பி.(100%), மே.வங்கம்(109%) பயன்படுத்தியுள்ளன.
மற்ற மாநிலங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மக்களுக்கு வேலைகிடைக்க வேண்டும் என்பதற்காக செலவிட்டுள்ளன. அந்த வகையில் ஆந்திரா(111.15%), ஹரியானா(105.56%), மத்தியப்பிரதேசம்(104.75%), ஒடிசா(100.45%), உத்தரகாண்ட்(107.78%), கர்நாடகா(100.36%), கேரளா(111.91%) செவிட்டுள்ளன
இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த செலவு 102.39% அதிகரித்துள்ளது. அதாவது, இந்தத்திட்டத்துக்கு ரூ.93,428 கோடி மட்டும்தான் ஒதுக்கப்பட்டநிலையில் தற்போது செலவினம் ரூ.95,664 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையை முடித்த குடும்பத்தினர் எண்ணிக்கையைக் கணக்கிடும்போது, 2018-19ம் ஆண்டுக்குப்பின் நடப்பு நிதியாண்டு மிகக்குறைவாகும். நடப்பு ஆண்டில், 37.30 லட்சம் குடும்பங்கள் மட்டும் 100 நாட்கள் வேலை செய்துள்ளனர். 2020-21ம் ஆண்டில் 71.90 லட்சம் குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை கிடைத்தது. 2019-20ம் ஆண்டில் 4.06லட்சம் குடும்பங்களுக்கும், 2018-19ம் ஆண்டில் 52.50 லட்சம் குடும்பங்களுக்கும் 100 நாட்கள் வேலை கிடைத்தது.

2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்பிச்சென்றனர். இதனால், தொழிலாளர்கள் அதிகமாக இருக்கும் மாநிலங்களி்ல் 100நாட்கள் வேலைத்திட்டத்துக்கு அதிகமான கிராக்கி இருந்தது.
தொழிலாளர் பொருளாதார வல்லுநர் ஷியாம் சுந்தர் கூறுகையில் “ 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு கிராமங்களில் தேவை இருப்பதைப்பார்க்கும்போது, வேலையின்மை அளவு குறையவில்லை. நகர்ப்புறங்களில் வேலையின்மை இன்னும் அதிகமாக இருப்பதைத்தான் காட்டுகிறது.
இதன் மூலம் தொழிலாளர்சந்தை, கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக இன்னும் மீளவில்லை. பல மாநிலங்கள் 100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதி தீர்ந்துவிட்டபோதிலும் அடுத்தநிதியாண்டு பணத்தை நம்பி மக்களுக்கு வேலை கொடுக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ஒதுக்கியநிதி போதுமானதாக இருக்காது. கடந்த நிதியாண்டில் ரூ.73ஆயிரம் கோடி ஒதுக்கி பின்னர் கூடுதலாக பணம் ஒதுக்கப்பட்டது நினைவிருக்கும் ”எ னத் தெரிவித்தார்
