ஆந்திரா மாநிலம், கர்னூலில் பகுதியில் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த ஆறு வயது சிறுவன் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்துள்ளான். அன்று மதிய உணவு இடைவேளையின் போது, குழந்தை ஓடிவிளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, சூடான சாம்பர் கொண்ட அண்டாவில் தவறுதலாக தவறி  விழுந்துள்ளான். 

 இதையடுத்து உடனே, அந்த சிறுவன் கர்னூல் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். சிகிச்சை பலனின்றி மாலை 4.30 மணியளவில் சிறுவன் இறந்துவிட்டான். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

போலீஸ் விசாரணையில், பணிப்பெண்கள் குழந்தைகளை வரிசையில் மதிய உணவு மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். இந்த சிறுவன் வரிசையில் இல்லை. வரிசையில் இருந்து வெளியே ஓடியுள்ளான். அதே நேரத்தில், சிலர் சூடான சாம்பார் கொண்ட ஒரு பாத்திரத்தை கொண்டு வந்தனர். இந்த சிறுவன் அப்போது வரிசையில் இருந்து விலகிச் சென்றான். பின்னர், சாம்பார் பாத்திரத்தில் கீழே விழுந்தார். சிறுவன் மிகவும் வேகமாக ஓடியதால், உடனடியாக கண் சிமிட்டிய நேரத்தில் அந்த பாத்திரத்தில் விழுந்து விட்டான் என்பது தெரிய வந்தது.  இது கர்னூல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.