Asianet News TamilAsianet News Tamil

மும்பை அரபிக்கடல் பகுதியில் ரூ.3600 கோடியில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை….பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கினார்

sivaji statue
Author
First Published Dec 24, 2016, 10:31 PM IST


மும்பை அரபிக்கடல் பகுதியில் ரூ.3600 கோடியில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை….பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கினார்

மும்பை அரபிக் கடலில் ஒரு கிலோமீட்டல் தொலைவில், சத்ரபதி வீர சிவாஜிக்கு ரூ. 3600 கோடியில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை மஹாராஷ்டிரா நிறுவ உள்ளது. இதற்காக நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் காட்டினார்.

மும்பையில் அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், இந்த திட்டத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்து.

சிலை, நினைவு மண்டபம்

மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்கிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகழை உலகறிய செய்யும் வகையில் மஹாராஷ்டிராஅரசு மும்பை அரபிக்கடலில் அவருக்கு மிக உயரமான சிலை மற்றும் நினைவு மண்டபத்தை நிறுவ உள்ளது.

630 அடி உயரம்

இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை காட்டிலும் உயரமானதாக  630 அடி உயர சிலையாக குதிரையில் சிவாஜி அமர்ந்திருப்பதுபோல் (192 மீட்டர்)நிறுவப்பட இருக்கிறது. மேலும், இங்கு அருங்காட்சியகம், சிறிய அரங்கு,கூட்ட அரங்கு உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட உள்ளன. 

மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள கிர்குவாம் சவுபதி கடற்கரையில் கடலுக்குள் 1.5 கி.மீ தொலைவில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது.

ஹோவர்ட்கிராப்ட் கப்பல்

இந்த சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கடலுக்குள் கட்டுமானம் நடக்கும் பகுதிக்கு ஹோவர்கிராப்ட்கப்பலில், பிரதமர் மோடி, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், சிவசேனா தலைவர்உத்தவ் தாக்ரே,சிவாஜியின் வழித்தோன்றல்களும் எம்.பி.களுமான உதயன் ராஜே போஸ்லே, சாம்பாஜி ராஜே ஆகியோர் சென்றனர்.

கலசநீர்

ஹோவர்ட்கிராப்ட் கப்பல் கட்டுமானம் நடக்கும் இடத்தை அடைந்ததும், பிரதமர் மோடியிடம், மஹாராஷ்டிராவில் பாயும் நதிகளின் நீர்அனைத்தும் கொண்ட ஒரு கலசத்தை முதல்வர் பட்நாவிஸ் கொடுத்தார். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து மண் கொண்டு வரப்பட்டு இருந்தது. கப்பலில் இருந்தவாரே பிரதமர் மோடி, தன் கையில் உள்ள கலசநீரை கடலில் ஊற்றி, பூஜைகள் செய்து, அடிக்கல் நாட்டினார்.

கசப்புகளை மறந்து...

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு காரணமாக சிவசேனா கட்சிக்கும், பாரதிய ஜனதாகட்சிக்கும் இடையே கடும் சலசலப்பு இருந்து வருகிறது. ஆனால், இந்த நிகழ்ச்ியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவும், பிரதமர் மோடியும் கசப்பானவிஷயங்களை மறந்து பேசினர்.

தேர்தல் வாக்குறுதி

இந்த விழாவுக்காக ஆளும் பாரதியஜனதா கட்சி தொலைக்காட்சி, நாளேடு, ஆன்-லைன், வானொலி என அனைத்திலும் விளம்பரம் செய்து இருந்து பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்து இருந்தது. பாரதியஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் சிவாஜிக்கு சிலை வைப்பது என்பது முக்கியமானதாக இருந்தது. அதை இப்போது நிறைவேற்ற முனைப்பு காட்டியுள்ளது.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios