Asianet News TamilAsianet News Tamil

திருப்பதி கோயிலில் தங்க நகைகள் மாயம்..? பக்தர்கள் அதிர்ச்சி..!

திருமலை திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.7.36 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Silver crown, gold rings go missing from TTD Missing
Author
Tirupati, First Published Aug 27, 2019, 6:06 PM IST

திருமலை திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.7.36 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திராவில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. வருடத்தின் எல்லா நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. உலகின் பணக்கார கடவுளாக ஏழுமலையான் பக்தர்களால் கொண்டாடப் படுகிறார். அங்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் சுமார் 9800 டன் நகைகள் திருப்பதி கோயில் கருவூலத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. Silver crown, gold rings go missing from TTD Missing

இந்நிலையில், திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.7.36 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலாளர் பானுபிரகாஷ் கூறுகையில், வெள்ளி கிரீடம், தங்கம் மோதிரம், தங்கம் நெக்லஸ் காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார். Silver crown, gold rings go missing from TTD Missing

அத்துடன் திருப்பதி தேவஸ்தானம் பதிலளிக்க வேண்டும் எனவும் காவல்துறையில் புகார் அளிக்காமல் ஒரு குறிப்பிட்ட நபர் மீது மட்டும் பழி சுமத்தி தப்பிப்பது நியாயமில்லை எனவும் குறிப்பிட்டார். இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios