Asianet News TamilAsianet News Tamil

ஒன்றிய அரசு சுகாதாரத் திட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் - சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை ஏற்பு!

ஒன்றிய அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் சித்த மருத்துவமனைகளிலும் இலவச மருத்துவம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Siddha treatment under union govt health scheme for employees  madurai mp su venkatesan request Accept
Author
First Published Jul 30, 2023, 10:56 AM IST

ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு சுகாதாரத் திட்டத்தில் (CGHS) உள்நோயாளிகளல்லாத பிற சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச மருத்துவம் மற்றும் ஈட்டுதவித்தொகை இதுவரை ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த வசதி சித்த மருத்துவத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியாவிடம் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி.க்கு அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஜுலை 24 ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், “இனிவரும் காலங்களில், தனியார் சித்த மருத்துவமனைகளிலும் இந்த வாய்ப்பு அரசு பணியாளர்களுக்கு கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

தேர்தல் வெற்றி: ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., கூறுகையில், “இது நவீன சித்த மருத்துவ துறைக்கும், தொன்மையான தமிழ் மரபு மருத்துவத்திற்குமான மிகப்பெரிய வெற்றி. எனது கோரிக்கையை ஏற்ற ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியாவுக்கு நன்றி.” என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios