கர்நாடாக மாநிலத்தில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக பாஜக எம்எல்ஏ மடல் விருபாக்ஷாவை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மாதல் விருபாக்‌ஷா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி நடவடிக்கை எடுக்கமாறு சித்தராமையா வலியுறுத்தி வருகிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக அரசைக் கண்டித்தும் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மாதல் விருபக்ஷாவைக் கைது செய்யக் கோரியும் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரால் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்தனர்.

M K Stalin Camel: முதல்வருக்கு பரிசளித்த ஒட்டகத்தின் கதி இதுதானா! விலங்கின ஆர்வலர்கள் கவலை

"மாநிலத்தில் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் நடக்கின்றன. அரசாங்கம் அதற்கு ஆதாரம் கேட்டது, இதுவே அதற்கான ஆதாரம்தான். முதல்வர் பொம்மை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி கூறினார்.