இந்திய ராணுவ வீரர் பனி பாறைக்கு கீழே 6 நாட்கள் உயிரை பிடித்துக்கொண்டு இருக்க முடியும்போது, நாட்டின் வளர்சிக்காக நம்மால் ரூபாய் நோட்டை மற்ற சில மணி நேரம் வரிசையில் நிற்க முடியும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் கூறியுள்ளார்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் என பல அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த நிலையில் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ராணுவ வீரர் ஹனுமந்தப்பா, 6 நாட்கள் 35 அடி பனி பாறைகளின் கீழே மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் சிக்கியிருந்து உயிரோடு மீட்கப்பட்டார். இதை குறிப்பிட்டு சேவாக் இவ்வாறு கூறியுள்ளார்.
