பதவி விலகும் முடிவை திரும்ப பெற்றார் சரத்பவார்… கட்சி நிர்வாகிகள் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததால் அதிரடி!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் திரும்ப பெற்றுள்ளார். 

Sharad Pawar  withdrew his decision to resign

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் திரும்ப பெற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக கடந்த 2ம் தேதி சரத்பவார் அறிவித்தார். இதனை அவரது கட்சியை சேர்ந்த பெரும்பலான நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்பட்டது. மேலும் சரத்பவார் தான் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். 

இதையும் படிங்க: நீட் தேர்வு : பெங்களூருவில் பிரதமர் மோடியின் 2 நாள் ரோட்ஷோவில் மாற்றம்.. பாஜக அறிவிப்பு..

ஆனால் சரத்பவார் தனது முடிவில் மாற்றிக்கொள்வதாக இல்லை. பலரும் அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த முடிவை சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கல்விக்காக எதிப்பு அலைகளில் நீந்திய நியாஸ் கான் மற்றும் அவரது 11 மகள்கள்; ஆசிரியர் ஆனது இப்படிதான்!!

நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் சரத்பவார் என்றும் அதனால் 2024 பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத்பவார் திரும்ப பெற்றுள்ளார்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios