கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவனை பிரிந்த மோகனா (25) என்ற இளம்பெண்ணை கடந்த அக்டோபர் மாதம்  திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சங்கரப்பா ஒரே நாளில் பிரபலமானார்.

25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 50 வயது சங்கரப்பா மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இளம்பெண்ணை திருமணம் செய்த சங்கரப்பா

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் அக்கிமரிபால்யம் கிராமத்தை சேர்ந்த சங்கரப்பா(50). கடந்தாண்டு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவனை பிரிந்த மோகனா (25) என்ற இளம்பெண்ணை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சங்கரப்பா ஒரே நாளில் பிரபலமானார்.

காதல் டூயட்

திருமணம் முடிந்த கையோடு சங்கரப்பா தனது இளம் மனைவி மோகனாவின் விருப்பத்திற்கு ஏற்ப இன்ஸ்டாகிராமில் காதல் டூயட் பாடி கொண்டு, வீடியோக்கள் பதிவிட்டு கொண்டு இருந்துள்ளார். இது திருமணமாகாத இளைஞர்களை கலங்க வைத்தது. இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுக்கொண்டிருந்த நேரத்தில் நாயால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருமணமாகி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் நாய் வளர்ப்பதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சங்கரப்பாவை மனைவி மேகனா தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சங்கரப்பா வீட்டைவிட்டு வெளியேறினார். இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் சங்கரப்பாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தற்கொலை

இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள பலா மரத்தில் தனது வெட்டியால் சங்கரப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சங்கரப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குடும்ப பிரச்னை காரணமாகதான் சங்கரப்பா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.