பள்ளி பருவத்தில் ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் பற்றி இப்போது கூட புகார் அளிக்கலாம் என்றும் கால நிர்ணயம் ஏதும் இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 

பள்ளி பருவத்தில் ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் பற்றி இப்போது கூட புகார் அளிக்கலாம் என்றும் கால நிர்ணயம் ஏதும் இல்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மீடூ ஹாஷ்டாக் இயக்கத்தின் மூலம் பல்வேறு துறைகளை சார்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை பதிவிட்டு வருகின்றனர். பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை இவ்வளவு நாட்களாக தாங்கள் வெளிப்படுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அப்போது வெளிப்படுத்த தேவையான உத்வேகம் தங்களுக்கு இல்லை என்றும் அது குறித்து தற்போது வெளியிடுவதற்கு மன தைரியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு நிகழ்ந்த இந்த கொடுமை குறித்து தற்போது வெளிப்படுத்துவதன் மூலம், இதுவரை ஏற்பட்ட மனவுளைச்சலில் இருந்து சற்றே நிம்மதி அடைவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறி வருகின்றனர்.

இப்படி பாலியல் சீண்டல்களுக்கு ஆளானவர்கள் இவ்வளவு நாட்கள் வாய் திறக்காமல் தற்போது ஏன் மௌனம் கலைக்கின்றனர் என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுகின்றன. சமூகத்தில் உள்ள முக்கிய புள்ளிகளை அவமானப்படுத்துவதற்கோ, சுய விளம்பரத்திற்காகவே இதுபோன்ற ஆதாரமில்லாத புகார்களை பதிவிட்டு வருவதாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி பருவத்தில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் பற்றி, இப்போது கூட புகார் அளிக்கலாம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்களது பள்ளி பருவத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் இப்போதுகூட புகார் அளிக்கலாம். அதற்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது. போஸ்கோ சட்டத்தில் அதுபோன்ற எந்தவொரு கால வரம்பும் இல்லை என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இப்போது தெரிவிக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளை, அப்போதே ஏன் கூறவில்லை என்று சொல்பவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.