அரசும் நீதித்துறையும் கூடிக்குலாவுவது ஜனநாயத்துக்கு அடிக்கப்படும்ட சாவுமணி என  உச்சநீதிமன்ற நீரிபதி செல்லமேஸ்வரர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், எழுதியுள்ள கடிதமொன்றில்  அரசும் நீதித்துறையும் கூடிக் குலாவுவது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மார்ச் 21 ஆம் தேதியிட்ட இந்த கடிதத்தின் நகல் உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் பெங்களூருவிலிருந்து ஒருவர் ஏற்கனவே நமது நீதிமன்ற மாண்புக்கு அடி கொடுத்து விட்டார். கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நமது முதுகுக்குப் பின்னால் அரசுக்கு வேலை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார் என குறிப்பிட்டுள்ளார்

உச்சநீதிமன்ற நீதிபதிகளான நாம் நமது சுதந்திரத்தையும், அமைப்பு ரீதியிலான இறையாண்மையையும், அதிகரித்து வரும் அரசின் ஆக்கிரமிப்புக்கு இழந்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஏதோ அரசுத் துறையின் தலைமை அதிகாரி போல கருதி நடத்தும் போக்கு காணப்படுகிறது. நமது பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்வது அபூர்வமாகி விட்டது. காலம் தாழ்த்துவதே நடைமுறையாக உள்ளது. இது ஒரு துன்பமான அனுபவமாக மாறியுள்ளது.

நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு பரிந்துரைகளை அளிப்பதோடு உயர்நீதிமன்றத்தின் பணி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் என்ன விதமான தகவ்கள் தொடர்போ, விளக்கம் கோருதலோ அரசுக்கும் உச்ச நீதின்றதுக்கும் நடுவில் மட்டும்தான்.

ஒரு நீதிபதி தொடர்பான பரிந்துரை காத்திருப்பில் இருக்கையில் அவர் மீது  நடவடிக்கை எடுப்பது பற்றிய சம்பவம் இதுவரை கேள்விப்பட்டதில்லை. உச்ச நீதிமன்ற கொலிஜிய பரிந்துரையை கேள்விக்குள்ளாக்குவது ஏற்புடைத்தல்ல. 

அரசும் நீதித்துறையும் கூடிக் குலாவுவது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணி  போன்றது என்பதை மறக்க கூடாது. இருவருமே அரசியல் சாசனத்தின் பரஸ்பர காவல்காரர்கள். 

இது தொடர்பாக உடனடியாக அனைத்து நீதிபதிகளின் கூட்டம் ஒன்றைக் கூட்டி விவாதிக்க வேண்டும். அரசியல் சாசன வழிமுறைகளின் படி உச்சநீதிமன்ற இருப்பை உறுதி செய்ய இதுவே சிறந்த வழி என்று செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்..